அநுர அரசின் அதிரடி நடவடிக்கை - நாட்டை விட்டு தப்பியோடும் அரசியல் பிரபலங்கள்
கடந்த அரசாங்க காலங்களில் பாரியளவில் ஊழல் மற்றும் மோசடிகளை செய்த பல பிரபலங்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவ்வாறு தப்பி சென்றுள்ள முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகளை இன்டர்போல் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் நடத்தும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்காமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் குறித்து நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
சிவப்பு அறிவிப்பு
அத்துடன் அவர்களை கைது செய்ய இன்டர்போலிடமிருந்து சிவப்பு அறிவிப்புகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளுக்கு அவசியமான முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலங்கள் வழங்க வேண்டிய நபர்கள் நாட்டிற்கு வந்து வாக்குமூலங்களை வழங்குமாறு வட்ஸ்அப், மின்னஞ்சல் மற்றும் தூதரகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலங்களை வழங்க முன்வராதவர்கள் குறித்து நீதிமன்றங்களில் முறைப்பாடு அளிக்கப்படும். அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாரிடம் இருந்து சிவப்பு அறிவிப்புகள் பெறப்படும் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 21 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
