சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்தவாரம் இலங்கை வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
இலங்கைக்கு உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்
இலங்கைக்கு உதவி வழங்குவதற்கான இணக்கப்பாட்டை தற்போதைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளதாகவும், இலங்கைக்கான அதன் பிரதிநிதிகளின் விஜயத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்படும் புரிந்துணர்வின் அடிப்படையில் நாணய நிதியத்தின் கடன் தொகை விரைவில் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகத்தின் அத்தியாவசியப் பொருட்களுக்கான உபகுழுவின் தலைவர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

எனினும் நாணய நிதியத்தின் கடன் வழங்கப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் செல்லக்கூடும் என்பதாக அரசியல்வாதிகள் பலரும் எதிர்வு கூறியுள்ளனர்.
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்... டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம் News Lankasri