இலங்கையை காப்பாற்றுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முதல் முறையாக வெளியிட்ட தகவல்
இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவான புரிதலை பெற்றவுடன் அதற்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் பொருளாதார தளம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் NDTV தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் நிலைமையைக் கண்டு தனது மனம் உடைந்து விட்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா சுட்டிக்காட்டியுள்ளார்.
தவறான நிர்வாகத்தின் விளைவாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும், இலங்கையில் தொழில்நுட்ப குழுவொன்று ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவை மதிக்கிறேன். இக்கட்டான சமயங்களில் ஆதரவளித்து இலங்கையின் நல்ல நண்பனாக இந்தியா திகழ்கிறது என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri