சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கை விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கமைவான வகையில் இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவ தயார் என தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கெரி ரைஸ்

மேலும், இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளதுடன் கொடுப்பனவுகளை செலுத்த முடியாதுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நெருக்கடி நிலைமையினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும், இலங்கையின் நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதிநிதிகள்

தொழில்நுட்ப ரீதியிலான உதவிகள் வழங்குவது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்ய உள்ளதாகவும் ரைஸ் தெரிவித்துள்ளார்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan