இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்: அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக பிரதமர் அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குக் கடன் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், அதிரடியான சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதுடன், அறிவிப்புகள் சிலவும் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், எதிர்வரும் சில மாதங்களில் வரித் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான கடனுதவிக்கு நிறைவேற்றுக்குழு அனுமதியளித்துள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் பல மறுசீரமைப்புத் திட்டங்களைக் கொண்டு வருவதற்கும் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
