சர்வதேச போட்டியில் சாதனைப்படைத்த யாழ். மாணவன் (Photos)
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந்தன் வெற்றியாளராக தெரிவாகியுள்ளார்.
மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கையை சேர்ந்த 60 மாணவர்கள் பங்கு பற்றி இருந்தோடு, யாழ்ப்பாணத்தில் இருந்து 24 பேர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், சுமார் 84 நாடுகளில் இருந்து, 2500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்த கொண்ட இந்த போட்டியானது, A,B,C,D,E மற்றும் F பிரிவின் கீழ் நடைபெற்றது.
சாதனைப்படைத்த மாணவர்கள்
அதில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட 24 பேரும் தத்தம் பிரிவில் போட்டியிட்டதில், விக்னேஸ்வரன் ருஷாந்தன் C பிரிவில் வெற்றியாளராக தெரிவாகியுள்ளார்.
மேலும், சுதர்சன் அருணன் (வயது 6) வைஷாலி ரஜீவன் (வயது 8 ) அஷ்வினி அனோஜன் (வயது 8) ஆகியோர் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டனர். ஏனைய 20 மாணவர்களும் மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |