சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் : இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள்

Indrajith
in கிரிக்கெட்Report this article
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 இல், நேற்று இடம்பெற்ற முக்கிய அரையிறுதிப் போட்டியில், இலங்கை மாஸ்டர்ஸ் அணி, மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணியிடம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சவால் மிக்க இலக்கைத் துரத்திச் சென்ற இலங்கை அணி, இலக்கை நெருங்கி வந்தபோதும், இலக்கைக் கடக்க முடியவில்லை.
இறுதிப் போட்டி
அசேல குணரத்னவின் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக, இலங்கை அணி, இலக்கை நெருங்க முடிந்தது. எனினும், மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சாளர்கள் இறுதி ஓவர்களில், இலங்கையை கட்டுப்படுத்தி வெற்றியை உறுதிப்படுத்தினர்.
இதன்படி முதலில் துடுப்பெடுதாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 179 ஓட்டங்களை பெற்றது.
எனினும் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 173 ஓட்டங்களையே பெற்றது.
இந்த முடிவின் மூலம், மார்ச் 16 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.
மற்றொரு அரையிறுதியில், அவுஸ்திரேலிய அணியை, இந்தியா வெற்றிக்கொண்டு, இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |