இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச பொறி முறை: வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை

United Nations Sri Lankan Tamils Jaffna Northern Province of Sri Lanka
By Kajinthan Sep 22, 2023 08:04 AM GMT
Report

இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரிக்க உடனடியாக சர்வதேச பொறிமுறையை ஐ.நா ஏற்படுத்த வேண்டும் என வடக்கு - கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு ஐ.நா அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.

நேற்றையதினம் (21.09.2023) வியாழக்கிழமை யாழில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, ஐ.நா பொதுச்செயலாளர் மற்றும் ஐ.நா பொதுச்சபையின் உறுப்பினர்களுக்கு ஒரு வெளிப்படையான முறையீட்டை முன்வைக்க விரும்புகிறோம்.

இந்திய அரசிடம் கனடா பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை: வலுப்பெற்று வரும் மோதல் நிலை

இந்திய அரசிடம் கனடா பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை: வலுப்பெற்று வரும் மோதல் நிலை

ஐ.நா சாசனத்தின் அடிப்படை கோட்பாடு

போர் முடிவுக்கு வந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான உண்மையான நீதிப் பொறிமுறையை நிறுவி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் போர்க்குற்றவாளிகளுக்கு பொறுப்புக் கூறி தண்டனையைப் பெற்றுக் கொடுக்கவும் இலங்கை அரசின் தரப்பிலிருந்து இன்று வரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச பொறி முறை: வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை | International Investigation Sri Lankan War Crimes

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இலங்கை அரசாங்கமானது, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களை முற்றாக புறக்கணித்ததுடன், அடிப்படை சர்வதேச நியமங்களுக்கு எதிராக செயற்பட்டது. ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு எதிரான மீறல்.

ஜக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மை நோக்கங்களை இலங்கை மீறியுள்ளது. மனிதநேயம் மனித கண்ணியம் மற்றும் அனைத்துலக மனிதர்களுடைய அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க ஜக்கிய நாடுகள் சபை உறுதி பூண்டுள்ளதாக அதனுடைய சாசனம் வெளிப்படையாகக் கூறுகின்றது.

பெட்ரோல் - டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை: ரஷ்யா அறிவிப்பு

பெட்ரோல் - டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை: ரஷ்யா அறிவிப்பு

ஐ.நா சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கத் தவறிவிட்டது என்பதை எங்களுடைய அனுபவங்களின் ஊடாகவும் மற்றும் ஐ.நா குழு அறிக்கையில் பொதிந்துள்ள விபரங்கள் ஊடாகவும் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

பாரிய உயிர்ச் சேதங்கள்

ஜெனிவா ஒப்பந்தத்திறகு எதிரான மீறல் 1949ம் ஆண்டு மாநாட்டின் போர் பிரதேசங்களில் சிக்கிய பொது மக்களைப் பாதுகாப்பதாகும். ஜெனிவா உடன்படிக்கையின் ஒரு சாட்சியான இலங்கை, சிவில் பாதுகாப்பு கோட்பாடுகளையும் மாநாட்டின் அடிப்படை விதிகளையும் இறுதி யுத்த நேரத்தில் மீறியது.

யாழில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு

யாழில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு

இலங்கையின் போர்க் குற்றங்கள் ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையின் படி, இலங்கை அரச படைகள், இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் செறிந்து இருந்த பகுதியில் (சூனியபிரதேசம்) கடுமையான குண்டுத் தாக்குதல்களை நடத்தியது மற்றும பாரிய உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியது உறுதியாகியுள்ளது.

இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச பொறி முறை: வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை | International Investigation Sri Lankan War Crimes

அரச படைகளால் பயன்படுத்தப்பட்ட இரசாயண குண்டுகள், பொதுமக்களுடைய உடல்களில் எரிகாயங்களை உண்டு பண்ணி, இன்றும் மாறாத வடுக்களாக உள்ளன. ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைகளின்படி போரின் இறுதிக்கட்டத்தில் 40000 பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில் சரணடைந்த பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் அரச படைகளினால் கொல்லப்பட்டனர்.

சஹ்ரான் குழு குறித்து சிக்கிய ஆதாரங்கள்: விடுதலைப் புலிகள் மீது திசை திருப்பிய புலனாய்வு பிரிவு: அம்பலமான தகவல்

சஹ்ரான் குழு குறித்து சிக்கிய ஆதாரங்கள்: விடுதலைப் புலிகள் மீது திசை திருப்பிய புலனாய்வு பிரிவு: அம்பலமான தகவல்

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் பகுதியில் பாரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வுப் பணிகளின் போது பெண்களின் உள்ளாடைகள், விடுதலைப்புலிகளின் சீருடைகள் மற்றும் இலக்கத்தகடுகளோடு மனித எச்சங்கள் போன்றன தோண்டி எடுக்கப்பட்டன.

ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பது ஐக்கிய நாடு சபையினுடைய முதன்மைப் பொறுப்பாக உள்ள நிலையில் போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிப் பொறிமுறையை நிறுவுவதற்கு இலங்கை அரசுக்கு அழுதங்களைக் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபையை கேட்டுக் கொள்கின்றோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கை முட்டை விற்பனை: மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

செயற்கை முட்டை விற்பனை: மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US