இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லை! வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டம்
இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லை எனவும், இலங்கையின் அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,"ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடர் செப்டெம்பரில் நடைபெறவுள்ளது.
மனித உரிமைகள்
எனவே, மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்தது நல்லது. அவருக்கும் அறிக்கை முன்வைப்பதற்கு அது இலகுவானதாக இருக்கும். ஏனெனில் அவரால் விடயங்களை நேரில் அவதானிக்க முடிந்தது.
நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டியுள்ளோம். பொருளாதாரப் பாகுபாட்டை நிவர்த்தி செய்தல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு காண முடிந்தது.
நாம் எதையும் ஒளிக்கவில்லை. வெளிப்படைத் தன்மையுடன்தான் நடவடிக்கை இடம்பெறும். செப்டெம்பர் முதல் வாரமளவில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது பற்றிய வர்த்தமானியை வெளியிடுவதே அரசின் இலக்காக உள்ளது." என தெரிவித்துள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
