இலங்கை வந்தடைந்தார் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர்
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத் (FIFA) தலைவர் ஜியோவன்னி இன்பன்டீனோ (Gianni Infantino) இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கை வந்துள்ளதுடன், அவருடன் பிபாவின் ஐந்து அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.
குறித்த குழுவினர் இன்று காலை 08.15 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் ஜியோவன்னி இன்பன்டீனோ விசேட அதிதியாக பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த இறுதிப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு கொழும்பு, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சிஷெல்ஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ளது.
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri