வலிசுமந்த மக்களே வாருங்கள்: போராட்டத்திற்கு ஸ்ரீநேசன் அழைப்பு
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேசதினம் உலகளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.
அதனையொட்டி எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ் உறவுகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகளாகியும் உண்மைகள் கண்டறியப்படவில்லை. அதற்கு மாறாக,காணாமல் ஆக்கிய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலையே இலங்கையில் காணப்படுவதாக அவர் குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“குறித்த போராட்டமானது மட்டக்களப்பிலும் அது தொடர்பான ஜனநாயக ரீதியான போராட்டமானது, கல்லடிப் பாலத்தில் இருந்து காந்திப்பூங்கா வரை நடைபவனியாக மேற்கொள்ளப்படவுள்ளது.
ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து
யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகளாகியும் உண்மைகள் கண்டறியப்படவில்லை. நீதி மற்றும் இவ்வாரான செயற்பாடுகள் இனி இடம்பெறாது என உத்தரவாதம் அளிக்கப்படவில்லை.
காணாமல் ஆக்கிய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு மாறாக அக்குற்றவாளிகளுக்குப் பதவிகள், பதவியுயர்வுகள் வழங்கி கெளரவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே நீதிக்கான உள்நாட்டுப் பொறிமுறையைத் தமிழ் மக்கள் நம்ப முடியாத நிலையில்,சர்வதேச நீதிப் பொறிமுறையினை எமது உறவுகள் கோரவேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த நீதியான உரிமைப்போராட்டத்தில் வலிசுமந்த மக்கள் அனைவரும் பார்வையாளர்களாக அல்லாமல்,பங்காளிகளாக கலந்து கொள்வோம்.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
