தமக்குள் முரண்பாடான நிலைப்பாட்டில் தேசிய மக்கள் சக்தியினர்
தேசியமக்கள் சக்திக்குள்ளேயே(NPP) முரண்பாடான காணப்படுவதாக சமூக நீதிக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர். “அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மறுப்பது என்பது அரசியலை மறுப்பதாகும்.
நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், அவர்களின் பின்னால் புலானாய்வு பிரிவினர் திரிகின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் கூறிய அதேநேரம் நீதியமைச்சர் இலங்கையில் அரசியல் கைதிகள் என்று யாருமில்லை என்று கூறுகின்றார்.
எனவே தேசியமக்கள் சக்திக்குள்ளேயே இவ்வாறான முரண்பாடான நிலைகாணப்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
