விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு தடை உத்தரவு
முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் (SLC)க்கான இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
14 நாட்களுக்கு இடைநிறுத்தம்
இந்த உத்தரவையடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட SLC இடைக்கால குழுவின் பணிகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பான வர்த்தமானி நேற்று(06.11.2023) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 1 மணி நேரம் முன்

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
