காக்காமுனை தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் சர்வமத பண்டிகை நிகழ்வு
திருகோணமலை(Trincomalee) - கிண்ணியா தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் புத்தாண்டு சர்வமதப் பண்டிகை விழா ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது பாடசாலையின் தரம் 1 மாணவர்களின் பெற்றோர்களின் ஏற்பாட்டில் நேற்று (19.09.2024)பாடசாலையில் நடைபெற்றுள்ளது.
புத்தாண்டு விழா
குறித்த நிகழ்வானது பாடத்திட்டத்திற்கு அமைவாக வகுப்பு ஆசிரியர்களான PM ஐயூப் கான் , A நஸீபா ஆகிய ஆசிரியர்களின் வழிகாட்டலுக்கினங்க தரம் - 1 மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோரினது ஒத்துழைப்புடனும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பண்டிகைப் பலகாரங்கள் பரிமாற்றப்பட்டதுடன், கிராமிய விளையாட்டுக்களும் பெற்றோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதம விருந்தினராக பாடசாலை அதிபர் JM றபீக் அவர்களும் ஆரம்பப்பிரிவு பகுதித் தலைவர் PT . சரிபத்துள்ளா ஆசிரியரும் மற்றும் ஏனைய ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இவ்வாறான நிகழ்வுகள் பாடசாலை மாணவர்களின் கல்வி ஆர்வத்தினை அதிகரிக்கும் எனவும் வரலாற்றில் பாடசாலையில் முதன் முதலாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |