ஆப்பிரிக்க நாடொன்றில் இராணுவ கிடங்கில் திடீர் தீ விபத்து
மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்-யின் தலைநகர் ஜமீனாவில் கவுடுஜி மாவட்டத்திலுள்ள இராணுவ வெடிபொருள் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது நேற்று(19.06.2024) இரவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அரைமணி நேரத்திற்கும் மேலாக வெடிபொருட்கள் வெடித்ததில் அருகே இருந்த கட்டிடங்களும் குலுங்கியதாக கூறப்படுகிறது.
விபத்திற்கான காரணம்
இந்த வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 46 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு வெடிவிபத்திற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.
அந்நாட்டின் ஜனாதிபதி மஹமத் டெபி (Mahamat Deby), இச்சம்பவம் குறித்து வெளியிட்ட இரங்கல் பதிவில்,''பாதிக்கப்பட்டவர்களின் ஆன்மா அமைதி பெற வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |