பிரித்தானியாவில் மோசமடையும் பணவீக்கம்! - மூன்றாவது முறையாக வட்டி வீதம் அதிகரிப்பு
பிரித்தானியாவில் பணவீக்கமானது மேலும் அதிகரிக்க கூடும் என பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நீடித்துள்ள நிலையில், பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியில் பணவீக்கம் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் பணவீக்கமானது அடுத்த மாதமளவில் 8 வீதமாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
வங்கி அதன் வட்டி விகிதத்தை 0.25 சதவீத புள்ளிகள் அதிகரித்து 0.75% ஆக உயர்த்தியுள்ளது. எரிசக்தி கட்டணங்கள் மற்றும் உணவு செலவுகள் அதிகரித்து வருகின்ற நிலையில், உக்ரைன் - ரஷ்ய போர் காரணமாக மேலும் விலைகளை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
You My Like This Video