மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிர சோதனை நடவடிக்கை
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை மீறுவோரை கண்டறியும் வகையிலான தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோவிட் தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் அவற்றினை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் நிலையில் பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக தொற்றினை கட்டுப்படுத்துவதில் பல சவால்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதில் சுகாதார துறையினர் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினையும் மீறி செயற்படுவோரை கண்டறியும் வகையிலான நடவடிக்கைகளை மட்டக்களப்பு பொலிஸார் நேற்று ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புறநகர்ப்பகுதிகளில் பொலிஸாரும்,மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்களும் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
கூழாவடி,இருதயபுரம்,மாமாங்கம்,புன்னைச்சோலை,பாலமீன்மடு ஆகிய பகுதிகளில் இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி திறக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள் பொலிஸாரினால் மூடப்பட்டதுடன், தேவையற்ற வகையில் நடமாடியவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பாலமீன்மடு மீன்சந்தையில் இன்றைய தினம் அதிகளவான கூட்டம் கூடியிருந்த நிலையில் பொலிஸார் அவர்களை கடுமையான எச்சரிக்கை செய்து திருப்பியனுப்பியதுடன் அங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களையும் அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனர்.அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி பயனம் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.








ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
