பெண்ணின் தலையை தேடும் நடவடிக்கை தீவிரம் - கொலையாளி தொடர்பான தகவலை வெளியிட்ட பொலிஸார்
இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்கொலை செய்துகொண்ட உப பொலிஸ் அதிகாரி தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு, டாம் வீதியில் தலையில்லா பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது தலையை தேடி இன்றைய தினமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
களனி கங்கை பகுதியில் தலை வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொலிஸ் கடற்படை பிரிவு அதிகாரிகளினால் நேற்று பிற்பகல் மோதரை பகுதியில் இருந்து ஹங்வெல்ல வரையான களனி கங்கை பகுதியில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உப பரிசோதகரின் மூத்த சகோதரரும் கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகாத உறவு காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அவரும், குறித்த பொலிஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட காணியிலேயே தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் பொலிஸ் அதிகாரியினால் கொலை செய்யப்பட்ட பெண் அவரது வீட்டிற்கு பல முறை வந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் தொடர்பில் பொலிஸ் அதிகாரியின் மனைவியும் அறிந்திருந்ததாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ரஜினிகாந்த் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை.. நடிகர் மீசை ராஜேந்திரன் வீட்டு திருமணம்.. வீடியோ இதோ Cineulagam