இ.போ.ச பேருந்துகளின் தன்னிச்சையான செயற்பாடு: தனியார் பேருந்து சாரதிகள் குற்றச்சாட்டு (Video)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஏதோவொரு விதத்தில் அனைவரையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பலரின் நிலைமைகள் இதுவரையில் வெளிக்கொண்டு வரப்படவில்லை.
அவ்வாறு தமது குற்றச்சாட்டுக்களுக்கான தீர்வு இதுவரையில் கிடைக்கவில்லை என மட்டக்குளி வரையிலான சாலை பகுதியில் தமது பயணத்தை முன்னெடுக்கும் தனியார்துறை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் தமக்கு மேலும் கஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மட்டக்குளி டிப்போ பேருந்துகள் நடந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி தாம் குறித்த ஒரு அட்டவணையின் பிரகாரம் செயற்படும் போதிலும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு அரசாங்கத்தால் எரிபொருள் இலகுவில் கிடைப்பதால் தன்னிச்சையாக செயற்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பில் எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த பிரச்சினை தொடர்பில் விரிவான குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளனர்.
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan