சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி: அதிருப்தியில் இந்தியா (Video)
இலங்கையின் நீர்வள ஆராய்ச்சி நிறுவனமான நாராவுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள ஷி யான் 6 கப்பலின் வருகைக்கு இலங்கை அரசு நேற்று அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் இலங்கை இதற்கு வழங்கியுள்ள ஒப்புதலானது இந்தியாவிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வடிவமைப்பான சீ யான் 6 கலமானது உளவுத்துறை தகவல்களை திரட்டும் வல்லமை கொண்டதாக காணப்படுவதால் இந்தியாவின் அச்சம் மேலோங்கியுள்ளது.
இந்நிலையிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சர் இவ்வாரம் இலங்கைக்கு தனது விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், ஷி யான் 6 மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகை என்பது இலங்கையின் புலனாய்வு விடயங்களில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை உள்ளிட்ட மேலும் பல உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் நகர்வுகளை அலசி ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு...





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
