ஆயுள் தண்டனையில் தப்பிய பிள்ளையான்! TMVPயின் இராணுவ பிரிவை தேடும் புலனாய்வுத் துறை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் தற்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
இதன்படி தற்போது சட்டப் பிரதிநிதிகள் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு எவரும் சந்திரகாந்தனுடன் உரையாடல்களில் ஈடுபடுவதை CID தரப்பு மறுத்து வருகிறது.
இந்நிலையில் அரசாங்க அதிகாரிகளின் எதிர்ப்பு கூற்றுக்கள் இருந்தபோதிலும், கம்மன்பில, பிள்ளையானை ஆதரித்து ஒரு பொது பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவரது தடுப்புக்காவல் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்று வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிர்வாகம் பிள்ளையானை ஈஸ்டர் ஞாயிறு வழக்கோடு இணைக்க முயற்சித்ததாக கம்மன்பில கூறினார், இருப்பினும் ஜனாதிபதியால் கையொப்பமிடப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவில் அது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் வலியுறுத்திவருகின்றார்.
இந்நிலையில் சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ள ஈஸ்டர் ஞாயிறு வழக்கின் முன்னேற்றங்களை அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், பிள்ளையானின் அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) கட்சியில் இராணுவ பிரிவு இருந்ததாகவும் அதனை இலங்கை புலனாய்வுத் துறை தேடிவருவதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், TMVP தலைவருமான பிள்ளையானின் சிறை தண்டனை மற்றும் அதனால் அரசாங்கம் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது கீழுள்ள காணொளி...

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
