பாகிஸ்தானில் பதற்றம்: பயணிகள் தொடருந்தை கடத்திச் சென்ற குழு
பாகிஸ்தானில் (Pakistan) பயணிகள் தொடருந்து ஒன்றை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (11) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அதில் பயணித்த பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த 100 பேரை தாம், பணயக் கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக பலோச் விடுதலை இராணுவம் என்ற கிளர்ச்சி குழு அறிவித்துள்ளது.
தொடருந்து கடத்தல்
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பலோசிஸ்தான் மாகாணத்துக்கு, பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் கோரி அங்கு கிளச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள்.
பலோசிஸ்தான் சுதந்திர இராணுவம் என்ற பெயரில் இயங்கி வரும் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே இன்று தொடருந்து கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கடத்தலின் பின்னர் தொடருந்தில் இருந்த 6 படை உறுப்பினர்களை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்.. யார் யார் தெரியுமா? Cineulagam

புதிய வீட்டிற்கு மாறிய பிக்பாஸ் 8 புகழ் முத்துக்குமரன்... அவரது வீடு எப்படி இருக்கு பாருங்க, வீடியோ இதோ Cineulagam
