கடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதி வழங்கும் திட்டம் விரைவில்..!
கடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதி வழங்கும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம்
இந்த திட்டத்திற்கு காப்புறுதி நிறுவனம் ஒன்று ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் வரவு செலவுத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட பின்னர் கடற்றொழிலாளர்களுக்கு இந்த காப்புறுதி வழங்கப்படும் எனவும் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
மேலும், மொத்த மற்றும் பகுதியளவு சொத்து சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டால் குறித்த காப்புறுதி வழங்கப்படும் வகையில் இத்திட்டம் அமையும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 8 நிமிடங்கள் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
