வேலைக்கு செல்வதை தவிருங்கள்! பிரித்தானிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
பிரித்தானிய மக்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கட்டாயம் வேலைக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உடல்நிலை சரியில்லாத பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் சிறார் காப்பகங்களுக்கும் அனுப்ப வேண்டாம் எனவும் பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் கட்டாயமாக அணியுமாறும் பிரித்தானியாவின் UKHSA அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
இதேவேளை, 38C அல்லது அதற்கும் மேல் காய்ச்சல் இருந்தால் சிறார்கள் பாடசாலைக்கு செல்வதை தவிர்க்குமாறும், உடல்நிலை சீராகும் வரையில் ஓய்வெடுக்குமாறும் கேட்டுகொண்டுள்ளனர்.
கொரோனா, குளிர் காய்ச்சல் மற்றும் ஸ்கார்லெட் காய்ச்சல் உள்ளிட்டவை அதிகம் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
எதிர்வரும் வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் நிபுணர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
