பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தும் தனியார் வைத்தியசாலைகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
பீ.சீ.ஆர் பரிசோதனைகளை நடாத்தும் தனியார் வைத்தியசாலைகளுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தான பீ.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் நடாத்துவது குறித்து தனியார் வைத்தியசாலைகளுக்கு எழுத்த மூலமான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இந்த விடயம் குறித்து அறிவித்துள்ளார்.
பீ.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டவர்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானவர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படுவதனை உறுதி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.