இரண்டு முகக் கவசங்களை அணியுமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்
இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய கோவிட் வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் பின்னர் எந்தளவு இந்த வைரஸ் பரவியுள்ளதென ஒரு முடிவிற்கு வர முடியும் என பிரதி சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய கோவிட் வைரஸ் மாறுபாடு மிகவும் வேகமாக பரவ கூடும் என்பதனால் அதில் இருந்து தப்புவதற்கு இரண்டு முகக் கவசங்களை பயன்படுத்துவது மிகவும் சிறப்பாகும்.
தற்போதும் மக்கள் இரண்டு முகக் கவசம் அணிவது நல்லது. அவ்வாறான முறையில் கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து அதிகம் பாதுகாப்பு கிடைக்கும்.
பிரித்தானியாவில் தோற்றம் பெற்றுள்ள உருமாற்றம் பெற்ற கோவிட் வைரஸ், சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து முதல் முறையாக பரவிய கோவிட் வைரஸை விடவும் நூற்றுக்கு 56 - 75 வீதத்தில் வேகமாக மக்களுக்கு மத்தியில் பரவ கூடியதாகும் என அவர் மேலும் அதெரிவித்துள்ளார்.