பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள உத்தரவு
போதைப்பொருள் வலையமைப்பை முறியடிக்கும் நடவடிக்கை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவு ஒன்றை விடுத்துள்ளார்.
இதன்படி, கிராம சேவைக் களங்களில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறித்து அறிக்கை தயாரிக்க பொலிஸ் பிரிவு மட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அதிகாரிகளையும் தொடர்பு கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அறிக்கை
பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச மட்டத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு இந்த அறிக்கையை தயாரிப்பது பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் குறிக்கோள், அறிக்கையின் மூலம் அடையாளம் காணப்பட்ட போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போதைப்பொருள் விற்பனை செய்யக்கூடிய சந்தையை உடைப்பதும் ஆகும்.
கடந்த ஆறு மாதங்களில், ஒன்பது மாகாணங்களில் ‘யுக்திய’ நடவடிக்கைகளின் மூலம் 184,862 போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 5565 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.