கிண்ணியாவின் பிரபலமான பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலை அதிரடி பரிசோதனை
கிண்ணியாவின் பிரபலமான பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிசாலை சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம். அஜித் தலைமையில் அலுவலக பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்று (02) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மாணவர்களின் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் அகற்றப்பட்டது.
சட்ட நடவடிக்கை
மற்றும் மாணவர்களுக்கு போஷாக்கு நிறைந்த, சுகாதாரமான உணவுகளை வழங்கும் படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
இதனை செய்ய தவறும் பட்சத்தில் பாடசாலை சிற்றுண்டி சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் மேலும் மிக விரைவில் கிண்ணியாவில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கும் திடீர் விஜயத்தை மேற்கொண்டு சிற்றுண்டி சாலையில் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



