நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்க முயற்சிப்போர் தொடர்பில் விசாரணை
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் கருத்துகள் வெளியிடும் நபர்கள் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று அறிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுகளுக்கும் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அந்த பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தகவல் வழங்கினர்.
பயங்கரவாதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க அல்லது பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்தும் வகையில் கருத்துகள் வெளியிட்டு, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் சமாதானத்திற்கும் சேதம் விளைவிக்கும் நபர்கள் தொடர்பாக இந்த விசாரணை நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணை
இச்சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை அறிக்கை வடிவில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri