தடுப்புக்காவலில் சுரேஷ் சலேவுக்கு அநீதி..! சிறைச்சாலைக்கு அனுப்புமாறு அடம்பிடிக்கும் மனைவி

Sri Lanka Politician Easter Attack Sri Lanka Sri Lanka Government Law and Order Suresh Salley
By Aanadhi Aug 25, 2026 07:21 PM GMT
Report

தேசியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சித் தலைமையகத்தில் இன்று(25.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கவலை தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலே மனைவி அனுப்பிய கடிதம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய 180 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போதைய அமைச்சரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டுவரவுள்ள நிலையில், இந்த மாதம் 28ஆம் திகதியுடன் முடிவடையும் இந்த 180 நாள் தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீடிப்பது பொருத்தமற்றது.

தடுப்புக்காவலில் சுரேஷ் சலேவுக்கு அநீதி..! சிறைச்சாலைக்கு அனுப்புமாறு அடம்பிடிக்கும் மனைவி | Injustice To Suresh Salley In Detention

சுரேஷ் சலேவின் மனைவி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தடுப்புக் காவல் உத்தரவின்றி அவரை விளக்கமறியலில் வைக்குமாறும், அவ்வாறு செய்தால் விசாரணைகளுக்கு அவர் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை

180 நாட்கள் கடந்தும் இதுவரை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமலும், நீதிமன்ற நடவடிக்கை தொடங்கப்படாமலும் இருந்தால், அவரை விளக்கமறியலில் வைத்து சட்ட நடவடிக்கைகளைத் தொடருமாறு நாமும் வலியுறுத்துகிறோம்.

சஹ்ரான் மற்றும் நௌஃபர் மௌலவி இணைந்து இத்தகைய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளமை குறித்து 2015 முதலே குற்றப்புலனாய்வுத் துறை (CID) அறிந்திருந்தது. தாக்குதலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு வனாத்தவில்லுவில் 100 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

தடுப்புக்காவலில் சுரேஷ் சலேவுக்கு அநீதி..! சிறைச்சாலைக்கு அனுப்புமாறு அடம்பிடிக்கும் மனைவி | Injustice To Suresh Salley In Detention

மாவனல்லையில் புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. தாக்குதலுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு இந்திய உளவுத்துறையும் எச்சரித்தது.

இவை அனைத்தையும் அறிந்திருந்தும் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், 2016 முதல் 2019 டிசம்பர் வரை மலேசியா மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த சுரேஷ் சலேவை எந்த அடிப்படையில் கைது செய்துள்ளனர் என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

அசாத் மௌலானா வழங்கிய பேட்டி

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட 7 உள்நாட்டுக்குழுக்களின் அறிக்கைகளிலோ அல்லது தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களிலோ சுரேஷ் சலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

மேலும், 2 ஆண்டுகள் ஆய்வு செய்த எஃப்பிஐ (FBI) மற்றும் ஆஸ்திரேலிய பொலிஸ் போன்ற சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் இது 'ஐஎஸ்ஐஎஸ்' (ISIS) தாக்குதல் என்றே முடிவுக்கு வந்தன, அவற்றிலும் சலேவின் பெயர் இடம்பெறவில்லை.

தடுப்புக்காவலில் சுரேஷ் சலேவுக்கு அநீதி..! சிறைச்சாலைக்கு அனுப்புமாறு அடம்பிடிக்கும் மனைவி | Injustice To Suresh Salley In Detention

சேனல் 4 (Channel 4) ஊடகத்திற்கு எல்.டி.டி.ஈ முன்னாள் உறுப்பினரான அசாத் மௌலானா அளித்த பொய் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கூற்று முற்றிலும் பொய்யானது என முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இமாம் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.

சுரேஷ் சலேவுக்கு இழைக்கப்படும் அநீதி

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் (Writ) மனுவுக்கு எதிராக பேராயர் கார்டினல் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தடுப்புக்காவலில் சுரேஷ் சலேவுக்கு அநீதி..! சிறைச்சாலைக்கு அனுப்புமாறு அடம்பிடிக்கும் மனைவி | Injustice To Suresh Salley In Detention

தாக்குதல் நடந்த போது சுரேஷ் சலே அரச புலனாய்வுத் தலைவராக இருந்தார் என்ற தவறான தகவலின் அடிப்படையிலேயே பேராயர் அதனைச் செய்துள்ளார்.

நாட்டின் பயங்கரவாத வலையமைப்பை அழிக்க பாடுபட்ட ஒரு படைவீரருக்கு இழைக்கப்படும் இந்த அநீதி கவலையளிக்கிறது என்றார். 

கடவுச்சொல்லை வழங்க மறுக்கும் சுரேஷ் சலே! நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டு

கடவுச்சொல்லை வழங்க மறுக்கும் சுரேஷ் சலே! நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டு

ஹக்கீம் - நிசாம் காரியப்பருக்கு பகிரங்க எச்சரிக்கை..! அரசியல் சூட்சுமங்களை அம்பலப்படுத்திய சிறிநேசன்

ஹக்கீம் - நிசாம் காரியப்பருக்கு பகிரங்க எச்சரிக்கை..! அரசியல் சூட்சுமங்களை அம்பலப்படுத்திய சிறிநேசன்

YOU MAY LIKE THIS VIDEO..


மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US