இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு
இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்துள்ளார் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அநீதி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,"இலங்கை என்பது சிங்கள, பௌத்த நாடாக இருந்த போதிலும் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கே அநீதி இழைக்கப்படுகின்றது.
வடக்கில் 25 ஆயிரம் வரையிலான சிங்களக் குடும்பங்கள் இருந்தன. இன்று ஒருவர்கூட இல்லை. மட்டக்களப்பிலும் சிங்களவர்கள் இல்லை.
கொழும்பில் முஸ்லிம் மற்றும் தமிழர்களே வர்த்தகத்தை நிர்ணயிக்கின்றனர். இதற்குச் சிங்களவர்கள் தடை ஏற்படுத்துவதில்லை.
பெரும்பான்மை இனம்
நிலைமை இப்படி இருந்தும் சிங்களவர்களுக்கே இனவாத முத்திரைக் குத்தப்படுகின்றது. அதிகாரத்துக்காகத் தற்போதைய அரசு பெரும்பான்மை இனத்தைக் காட்டிக்கொடுத்துள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் இராணுவ அமைப்பு மற்றும் தேசியவாத அமைப்புகளுடன் சந்திப்பு நடத்தவில்லை. தமிழ்ப் பிரவினைவாதிகளை மட்டுமே சந்தித்தார்.
இரு தரப்புகள் இருப்பதை அரசு அவருக்குச் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை." என தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
