தியகல பகுதியில் ஒரு சிறுத்தை குட்டி உயிருடன் மீட்பு!
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வாகனம் மோதி காயமடைந்து நகர முடியாமல் தவித்த சிறுத்தை குட்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று(14.02.2026) வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சிறுத்தை குட்டி மீட்பு
ஹட்டன்- கொழும்பு பிரதான வீதிக்கு அருகாமையில் தியகல பகுதியில், சிறுத்தை குட்டியொன்று வாகனத்தில் மோதி கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வட்டவளை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் சந்தன கமகே, சம்பவ இடத்திற்குச் சென்று, விசாரணைகளை மேற்கொண்டு கொண்டுள்ளார்.

இதனையடுத்து, நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்து மிகுந்த முயற்சிக்குப் பிறகு வாகனத்தில் மோதி நடக்க முடியாமல் தவித்த சிறுத்தை குட்டியை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சிறுத்தை குட்டி சிகிச்சைக்காக ரந்தெனிகல கால்நடை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam