கிளிநொச்சியில் விவசாயி மீது தாக்குதல்: பொலிஸார் விசாரணை
கிளிநொச்சி- மகிழங்காடு பகுதியில் பெரும் போக பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வயல் காணி ஒன்றினை அடாத்தாக ஆக்கிரமிக்க முயற்சித்த போது அதனை தடுக்க முற்பட்ட விவசாயி மீது அந்த அமைப்பின் செயலாளரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த விவசாயி அடைந்த கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகயில், கிளிநொச்சி மகிழங்காடு பகுதியில் உள்ள தம்புகமம் என்ற வயல் காணியில் அதன் உரிமையாளர் கடந்த 07 ஆம் திகதி காலை பெரும் போக நெல் விதைத்துள்ளதுடன் அதற்கான களை நாசினிகளையும் விசிறியுள்ளார்.
இந்தநிலையில், நேற்றையதினம்(9) குறித்த வயல் காணியினை அடாத்தாக ஆக்கிரமிக்கும் நோக்கில் அப்பகுதி அமைப்பின் செயலாளர் எடுத்த முயற்சியை தடுக்க முற்பட்ட போது குறித்த விவசாயி தாக்குதலுக்குளளாகியுள்ளார்.
விசாரணை
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகிய விவசாயி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது நேற்றுப் பகல் வைத்தியசாலையில் வைத்து குறிப்பிட்ட சிலர் மீளவும் தாக்க முற்பட்ட சமயம் பொலிசாரால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்படுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக குறித்த கமக்கார அமைப்பு நிர்வாகம் கமநல சேவை நிலையம் ஆகியவற்றை தொடர்பு கொண்ட போதும் இது தொடர்பில் பதிலளிக்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
