‘குவாட்’ நாடுகளின் மலபார் கூட்டுப் போர் பயிற்சி ஆரம்பம்
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ‘குவாட்’ நாடுகளின் மலபார் கூட்டுப் போர்ப் பயிற்சி நேற்று ஆரம்பமாகியுள்ளது.
மலபார் கூட்டுப் போர்ப் பயிற்சி, கடந்த 1992ம் ஆண்டு, முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது, அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் கடற்படைகள் மட்டும் அதில் பங்கேற்றன.
பின்னர், ஜப்பானும், அவுஸ்திரேலியாவும் இதில் இணைந்தன. இதனையடுத்து இந்த 4 நாடுகளும் ‘குவாட்’ நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தநிலையில் ‘குவாட்’ நாடுகளின் மலபார் கடற்படை கூட்டுப் போர்ப் பயிற்சி நேற்று ஆரம்பமாகி, 4 நாட்களுக்குத் தொடரவுள்ளது.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அது சுதந்திரமான, வெளிப்படையான பிராந்தியமாக நீடிக்கும் வகையில், இந்த பயிற்சி நடக்கிறது. அமெரிக்கக் கடற்படை இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam