கிண்ணியாவில் நடைபெற்ற ஆலோசனணைக் குழுவை உருவாக்குவதற்கான முதலாவது கூட்டம்
கிண்ணியா நகர சபையின் எதிர்கால செயற்பாடுகள், வேலை திட்டங்கள், நீண்டகால குறுகியகால வேலைத் திட்டங்கள் மற்றும் சபை எதிர் நோக்குகின்ற சவால்கள் போன்ற பல விடயங்களில் ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசனணைக் குழுவை உருவாக்குவதற்கான முதலாவது கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டம், கிண்ணியா நகர சபை கேட்போர் கூடத்தில் தவிசாளர் எம்.எம் மஹ்தி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் உலமா சபை, சூரா சபை, பள்ளி சம்மேளனம், பிரதேச செயலகம், அல் மபர்ரா தரும நிதியம், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொது சுகாதார வைத்திய அதிகாரி, திட்டமிடல் பணிப்பாளர், சட்டத்தரணிகள், மருத்துவர்கள் வர்த்தகர்கள், மீனவ சங்கம், உதை பந்தாட்ட சம்மேளனம் என பல்வேறு சமூக நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கல்வி மான்கள் துறை சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை(11.07.2025) மாலை 4 00 மணிக்கு அடுத் அமர்வை நடாத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.




செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
