ஸ்பெயினில் திடீரென ஒலித்த எச்சரிக்கை ஒலி! விமானத்திலிருந்து குதித்த மக்கள்
ஸ்பெயின் நாட்டின் பால்மா டி மயோர்கா (PMI) விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராகவிருந்த விமானத்தில் தீ எச்சரிக்கை ஒலித்ததால் பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற விமானத்திலிருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாஞ்செஸ்டர் நோக்கி புறப்படவிருந்த ரயனேர் (Ryanair) நிறுவனத்தின் போயிங் 737 விமானத்தில் தீ அலாரம் ஒலித்ததையடுத்து பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.
தீ அபாயம்
தீ அபாயம் ஏற்பட்டதாக நினைத்து பயணிகள் அவசரமாக விமானத்திலிருந்து வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு குழுவினர், அவசர கதவுகள் வழியாக பயணிகளை வெளியேற்றும் பணியைத் தொடங்கினர்.
இருப்பினும், சில பயணிகள், குழுவினரின் அறிவுறுத்தல்களைக் கேட்காமல், பயத்தில் விமானத்தின் இறக்கைகளில் ஏறி அதிலிருந்து குதித்தனர். இதில் 18 பயணிகள் காயமடைந்துடன் இவர்களில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றனர்.
பீதியுடன் ஓடும் காட்சிகள்
விமான நிலையத்தின் அவசர நிலை நிர்வாகம் உடனடியாக செயலில் ஈடுபட்டதால் மக்களை காப்பாற்ற முடிந்ததுள்ளது. இந்த பரபரப்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
Passengers leap on WING to flee low-cost plane FIREBALL pic.twitter.com/oI1Dp7nnvG
— RT (@RT_com) July 5, 2025
பயணிகள் அலாரம் ஒலிக்கும் நேரத்தில் விமானத்திலிருந்து பீதியுடன் ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
சமீபத்தில் பல விமான நிறுவனங்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறுகள், அவசர நிலைகள், மற்றும் நடைமுறை சவால்கள் ஆகியவற்றைப் தொடர்ந்து, விமானப் பாதுகாப்பு குறித்து மேலும் கவலைக்குரிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ எச்சரிக்கை ஒலித்ததாகவும், எந்த ஆபத்தும் இல்லை என்றும் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
