வவுனியா பள்ளிவாசல் அருகாமையில் கட்டப்படும் வர்த்தக நிலையம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
வவுனியா பள்ளிவாசல் அருகாமையில் முறையான அனுமதியின்றி புதிய கடை ஒன்று நிரந்தரமாக வீதியோரமாக அமைக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா மாநகரசபை இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வவுனியா நகரின் பல பகுதிகளில் வீதியோர வியாபார நடவடிக்கைகளை வவுனியா மாநகரசபை அகற்றி வருகின்றது.
ஆனால் வீதியோரத்தில் பள்ளி வாசல் அருகாமையில் நிலையான கடை கட்டப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் வவுனியா மாநகர மேயர் சு.காண்டீபனுக்கு பலரும் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோரிக்கை
அத்தோடு, சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை பயன்படுத்தி கட்டப்படும் குறித்த கட்டுமான நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைத்துள்ளதாகவும் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
வீதியோர வியாபார நடவடிக்கைகளை அகற்றி வரும் வவுனியா மாநகர சபை பாரபட்சம் காட்டுவதாகவும், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆதரவுடன் மேயர் பதவிக்கு வந்தமையால் முஸ்லிம் வர்த்தகர்கள் வீதியோரத்தில் நிலையான கட்டிடம் கட்டி வியாபாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளதுடன், தமிழ் வியாபாரிகளை பழி வாங்குவதாகவும் பாதிக்கபபட்ட சிறு வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா மாநகர சபை ஆணையாளர் மற்றும் உறுப்பினர்கள கவனம் செலுத்த வேண்டும் எனவும் சிறு வியாபாரிகள் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
