தமிழ் மக்களின் 600 ஏக்கர் பூர்வீக நிலங்கள் பறிபோகும் அபாய நிலை
மகாவலி குடியேற்றத் திட்டத்தின் மூலம் வவுனியா வடக்கில் புதிதாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் 600 ஏக்கர் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களான வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் சஞ்சுதன், வவுனியா மாநகர சபை உறுப்பினர் தர்மா, வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் மற்றும் பிரதீபன் உள்ளடங்கிய கட்சி உறுப்பினர்கள், மற்றும் காணி உரிமையாளர்கள் ஆகியோர் குறித்த நிலங்களை சென்று பார்வையிட்ட பின்னரே இவ்வாறு தெரிவித்தனர்.
தமிழ் மக்களின் கிராமங்கள்
வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் எல்லைக் கிராமங்களின் ஒன்றான வெடிவைத்தகல்லு, திரிவைச்சகுளம் மற்றும் அதற்கு கீழான 600 ஏக்கருக்கும் மேலான வயல் காணிகள் சிங்கள மக்களினால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு வகையான காணி ஆவணங்களும் இல்லாமல் குறித்த காணிகள் எல்லையோர சிங்கள மக்களினால் சத்தமில்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த ஆக்கிரமிப்பு மிக வேகமாக வெடிவைத்தகல்லு சந்தி வரை நகர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.
குறித்த காணிகளை மகாவலி திட்டத்தின் கீழ் உள்வாங்கும் நோக்கோடு வனவளத் திணைக்களம் மற்றும் இராணுவத்தினரின் ஆதரவுடன் காடுகள் அழிக்கப்பட்டு குறித்த நிலப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.
காணி அபகரிப்பு
குறித்த நிலமானது தமிழ் மக்கள் யுத்தத்திற்கு முன்னர் விவசாயம் செய்த நிலங்களாகும்.
அவ் நிலங்களின் உரிமையாளர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு குறித்த காணிகளை துப்பரவு செய்த போது வனவளத் திணைக்களம் அவர்களை கைது செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது.
அதன்பின் நீதிமன்றததால் 2022 ஆம் ஆண்டு குறித்த காணி உரிமையாளர்கள் நிரபராதிகள் என வழக்கில் இருநது விடுவிக்கப்பட்ட பின்னரும் காணிகளை துப்பரவு செய்ய பாதுகாப்பு தரப்பினரும், வனவளத் திணைக்களமும் அனுமதி வழங்காது தடையை ஏற்படுத்தி வந்திருந்தனர்.
சிங்கள மக்கள்
தற்போது குறித்த இடங்கள் உள்ளடங்களாக 600 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் காடுகள் அழிக்கப்பட்டு பெரும்பான்மை சிங்கள மக்களால் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது.
கொக்கச்சான்குளம் ஆக்கிரமிக்கப்பட்டு கலாபோகஸ்வேவ ஆக மாறியது போன்று தற்போது திரிவைத்தகுளம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. ஆட்சி மாறிய போதும் தென்னிலங்கை அரசாங்கத்தின் மனநிலையில் மாற்றம் வரவில்லை.
எனவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்து தமிழ் மக்களும் ஓரணியில் அணி திரண்டு எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிலத்தை தென்பகுதி நிறுவனம் ஒன்றுக்கும், பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தமிழ் மக்களின் நிலங்கள் மகாவலி திட்டம் என்ற போர்வையில் கபளீகரம் செய்யப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெறுவதை தடுக்க முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.















செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 9 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
