கொட்டகலையில் டிட்வா புயவினால் பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளில் 50 சதவீதம் பூர்த்தி
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டிட்வா புயலினால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளில் சுமார் 50 சதவீதமானவை புனரமைக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பதற்காக அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
'வளமான நாடு – அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ்இ கடந்த ஆண்டு டிட்வா புயலினால் கொட்டகலை பிரதேச சபையின் 10 வட்டாரங்களுக்கு உட்பட்ட 56 இடங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் பாரியளவில் சேதமடைந்தன.
நிதி ஒதுக்கீடு
இந்தப் பாதிப்புகளைச் சீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய அரசாங்கத்தினால் 102 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாகாண சபையின் ஊடாக மேலும் 10 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அனோஜன் சிவராசாவைக் காப்பாற்றிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கும் இந்த விடயத்தை உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் அவர் இதன்போது நன்றி தெரிவித்தார்.
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan