ஆபத்தான நபரின் மோசடி வலையமைப்புடன் தொடர்பு - வாடகை வீட்டில் வசித்த பியூமி கைது
வெல்லம்பிட்டி - மீதொட்டமுல்ல, பெரேரா மாவத்தையில் வாடகை வீட்டில் தங்கியிருந்து ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த 'பியுமி' என அழைக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சுமார் 28 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடை கோட்ட நச்சுப் போதைப்பொருள் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் கடந்த 16ஆம் திகதி வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கைப்பற்றல்
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 274 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இவர் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான 'தெமட்டகொடை சமிந்தவின்' பிரதான கூட்டாளியான 'தெமட்டகொட இசுருவின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று புதுக்கடை இலக்கம் 2 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதன் பின்னர் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில், வெல்லம்பிட்டிப் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காவி உடையை காப்பாற்ற போராடிய ஞானசார தேரர்...! இறுதியில் மின் விசிறியில் தொங்கிய ஆடை - மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை
பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri