இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்கள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் எதிர்காலத்தில் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கட்சி இதுவரை கோரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு பதவிகளை ஏற்காமல் ஆதரவளிக்கவும், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு முடிவு செய்திருந்ததாக கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
எனினும் பல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர்களாக கட்சி உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் அதனை கட்சியின் மத்திய குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கும் தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கு விசாரணை தேவையோ, அவ்வாறான ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றோ தாம் நினைக்கவில்லை என கூறிய மஹிந்த அமரவீர, கட்சியின் தலைவருக்கு தமது முக்கியத்துவம் தெரியும் எனவும் அவருக்கு ஒரு புரிதல் உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை உடைக்க மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பார் என்று தாம் நினைக்கவில்லை எனவும் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
