தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவர் கைது
ஜனாதிபதி செயலகம் உட்பட சில அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் மெத்தியூவ் யசிரு குருவிட்ட என்பவரை குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
சங்கத்தின் பெயரில் இவர் விளம்பரமாக இதனை வெளியிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
இப்படியான பொய்ப் பிரச்சாரங்கள் காரணமாக இணையத்தளங்களை பார்வையிடுவதையும் சிலர் நிறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கணனி குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri