கெஹலிய ரம்புக்வெல்லவின் பரிந்துரையில் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர்கள் ! கோப் குழு விசாரணையில் வெளியான தகவல்
ஊடகத்துறைக்கான முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பரிந்துரையின் பேரில் எசோசியேட்ஸ் சிலோன் லிமிடெட் மற்றும் ஊடக அமைச்சுக்கு இரண்டு பேர் அதிக கொடுப்பனவுகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்டமையை, நாடாளுமன்ற கோப் குழு கண்டறிந்துள்ளது.
இந்த இரண்டு ஆலோசகர்களுக்கும் முறையே 1.8 மில்லியன் ரூபா மற்றும் 900,000 ரூபா கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டதாக குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோப் குழு விடுத்துள்ள பணிப்புரை
2020 டிசம்பர் 7 ஆம் திகதி எசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஆஃப் சிலோன் லிமிடெட் நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஒரு ஆலோசகருக்கு 1.8 மில்லியன் ரூபாவும், ஊடக அமைச்சுக்கு விடுவிக்கப்பட்ட மற்றுமொரு ஆலோசகருக்கு ஆலோசனைக் கட்டணமாக 9 லட்சம் ரூபாவும் எவ்வித ஆலோசனையும் பெறாமல் வழங்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையே பொறுப்புக்கூற வேண்டுமென கோப் குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில், ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊடக அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பணிப்புரை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



