கொழும்பு - ஜிந்துபிட்டிய துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான தகவல்
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பழனி ரிமோஷன் என்ற ஒரு திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரால் நடத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 44 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் அவரது 4 வயது மகன் மற்றும் அவரது சகோதரியின் 3 வயது மகள் காயமடைந்தனர்.
மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த கொழும்பு 13 ஐச் சேர்ந்த 44 வயது நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் புஷ்பராஜா என்கிற புகுடு கண்ணா என்ற ஒரு திட்டமிட்ட குற்றவாளியின் நண்பர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த குழந்தைகள் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்
ஜிந்துபிட்டிய, 125 தோட்டம் என்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியில் வந்த ஒரு குழுவினரே துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சி. சி. டி. வி. காட்சிகளின்படி, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் முகம்மூடி அணிந்துள்ளதுடன், மற்றைய நபர் மாறுவேடத்தில் கருப்பு நிற உடை அணிந்து வந்து துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டுச் சென்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன், கடந்த 16 நாட்களில் நடந்த மொத்த துப்பாக்கிச் சூடுகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதுடன், 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam