பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்! வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட தகவல்
பாகிஸ்தான்-சியல்கொட் நகரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட இலங்கையர் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் விசாரணை நடத்தும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பணி புரிந்து வந்த, இலங்கையர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பணிபுரியும் பிரியந்த குமார என்ற இலங்கையரே அதே தொழிற்சாலையின் ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்பின்னர் இலங்கையரின் உடலை தீயிட்டு எரித்துள்ளனர். எனினும், குறித்த இலங்கையர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கையர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டர் பதிவின் மூலம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் ஒரு நாடாக பாகிஸ்தான் வெட்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
பாகிஸ்தானில் அடித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் : உடன் பணி புரிந்தோரின் கொடூரச் செயல்

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
