கொழும்பில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பில் நேற்று சில பகுதிகளில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சிய வளாகத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர் கொலன்னாவ மீதொட்டமுல்ல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெமட்டகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் மதுபானத்திற்கு அடிமையானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவும் அவர் மதுபானம் அருந்திய நிலையில், கால்வாயில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் நடைபெறவுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடும் நெருக்கடியில் இலங்கை! - சீனாவிடம் உதவி கேட்ட கோட்டாபய (பத்திரிக்கை கண்ணோட்டம்) |

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
