இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையான 37 பொலிஸ் அதிகாரிகள்!
இலங்கையின் மேல்மாகாணத்தில் கடமையாற்றும் 37 காவல்துறை அதிகாாிகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களின் விபரங்களை தமக்கு அனுப்பி வைக்குமாறு காவல்துறை அதிபர் சிடி விக்ரமரட்ன, மேல் மாகாணத்துக்கு பொறுப்பான காவல்துறை பிரதி அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு பணித்துள்ளார்.
இந்த அதிகாரிகளில் 28 பேர் கொழும்பு பிரிவையும் ஆறு பேர் களுத்துறை பிரிவையும் இருவர் மேல் மாகாண வடக்குத் பிரிவையும் ஒருவர் மேல் மாகாண தெற்குப் பிரிவையும் சேர்ந்தவர்களாவர்.
இந்த விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் குறித்த காவல்துறை அதிகாரிகளை வைத்தியர் ஒருவரிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பின் ஊடகம் ஒன்றின் தகவல்படி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களில்
பெரும்பாலானவா்கள், கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் என்றும் சிலா் "ஐஸ்" க்கு
அடிமையானவர்கள் என தொிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது இருவர் ஹெராயினுக்கு அடிமையாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri