கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய(Harsha ilukpitiya) தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்படும் காலம்
இந்த நீட்டிப்பு 10 வருடங்களை கடந்த பின்னரும் அதற்கு ஒரு வருட செல்லுபடியாகும் காலம் வழங்கப்படுமாயின் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்படும் வரை மாத்திரமே அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, நவம்பர் முதலாம் திகதி முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சாதாரணக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் விரைவாக இலத்திரனியல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா





மனிதர்களைக் கொல்ல ஆசை! பூனைகளை சித்திரவதை செய்த லண்டன் சிறுவன்: அதிர்ச்சி வாக்குமூலம்! News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
