பேருந்து கட்டணங்கள் தொடர்பில் கெமுனு விஜேரட்ன வெளியிட்டுள்ள தகவல்
பேருந்து கட்டணங்களில் திருத்தம் செய்யப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஒரு லீட்டர் டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்ட போதிலும் அது கட்டணத்தை திருத்தி அமைப்பதற்கு போதுமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருட்களின் விலை 4 வீத ஏற்ற இறக்கம் ஏற்பட்டால் அது கட்டண திருத்தங்களில் தாக்கம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து கட்டணத் திருத்தம்
எனினும், 10 ரூபா விலை குறைப்பானது 1.1 வீத வீழ்ச்சி என்பதனால் கட்டணத் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 30 முதல் 40 ரூபா வரையில் டீசலின் விலை வீழ்ச்சியடைந்திருந்தால் கட்டணத் திருத்தம் செய்திருக்கலாம் எனவும் 10 ரூபா வீழ்ச்சிக்கு கட்டண திருத்தம் செய்யப்பட முடியாது எனவும் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அஞ்சன பிரியான்ஜித் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
