அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! விசேட சுற்றறிக்கை வெளியீடு
அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் கடமைக்கு அழைக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச பணியாளர்களை நாளை முதல் கடமைக்கு அழைப்பதற்கான பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும் நிறுவனத் தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள வளப்பற்றாக்குறையின் அடிப்படையில் அரச செலவீனங்களைக் குறைப்பதற்காக அரச நிறுவனங்களில் ஊழியர்கள் சேவைக்கு அழைப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 4 முக்கிய விடயங்களின் கீழ் ஊழியர்களை அழைப்பதை குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.


சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
